நடிகை சமந்தா உடல்நிலை மோசம்? இதை செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து..!

Samantha Tamil Cinema
By Thahir Dec 21, 2022 06:56 AM GMT
Report

நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சைக்காக தென்கொரியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தாவின் உடல்நிலை

மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடி வருகிறார் நடிகை சமந்தா. முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அவரின் உடல்நிலையில் மோசம் அடைந்துவிட்டதாகவும், அதனால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி தீயாகி பரவியது.

actress-samantha-ill-health-travel-to-south-korea

இதுகுறித்து நடிகை சமந்தாவின் செய்தி தொடர்பாளர் சமந்தா மருத்துவமனையில் இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை.

சமந்தா தன் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்து இருந்தார். இதை கேட்ட ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்து அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சிகிச்சைக்காக தென்கொரியா பயணம் 

இந்நிலையில், இன்னொரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது சமந்தாவின் உடல்நிலை நடக்க முடியாத அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அவரால் சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் நடிகை சமந்தா மயோசிடிஸ் என்னும் தசைப்பிடிப்பு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக தென் கொரியாவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தசைபிடிப்பு நோய்க்கு உடனடியாக உரிய சிகிச்சை எடுக்காமல் இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.