பிரிவுக்கு பின் ஒன்றாக முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன்... காலில் விழப்போன சமந்தா!

Samantha Viral Video Naga Chaitanya
By Sumathi Mar 20, 2024 08:24 AM GMT
Report

சமந்தாவும், அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளனர்.

அமேசான் ப்ரைம் நிகழ்ச்சி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் ஓரிரு வருடங்களிலேயே பிரிந்து செல்வதாக இருவரும் அறிவித்தனர்.

naga chaitanya - samantha

அதன்பின் ருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர். தொடர்ந்து, மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சிகிச்சை பெற்று வந்தார்.

அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் அறிவித்தார். சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற செயல்களில் இறங்கினார். தற்போது, ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் ஹனி பனி வெப் சீரிஸில் நடித்திருக்கும் அவர் அடுத்ததாக ஹிந்தி படம் ஒன்றிலும்,

இரண்டாவது திருமணமா? விரைவில் அம்மாவாகும் சமந்தா - குவியும் வாழ்த்துக்கள்!

இரண்டாவது திருமணமா? விரைவில் அம்மாவாகும் சமந்தா - குவியும் வாழ்த்துக்கள்!


வைரல் வீடியோ

தமிழில் சில படங்களிலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் வெப் சீரிஸ்கள், ஷோக்கள் உள்ளிட்டவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சமந்தாவும், அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் கலந்துக் கொண்டனர்.

ஒரே நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டாலும்; ஒரே நேரத்தில் மேடையில் இருவரும் இடம்பெறவில்லை. அதில், யக்குநர் கரண் ஜோஹர் காலில் வருண் தவான் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.

உடனடியாக சமந்தாவும் கரண் ஜோஹர் காலில் விழ போனார். உடனே கரண் ஜோஹர், நோ நோ என்று சொல்லி அதை தடுத்துவிட்டார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.