Monday, Jun 23, 2025

சமந்தா மனைவியாக இருக்கும்போதே காதலியுடன் போஸ் கொடுத்த நாக சைதன்யா - வைரலாகும் புகைப்படம்

Samantha Naga Chaitanya
By Nandhini 3 years ago
Report

தற்போது சமூகவலைத்தளங்களில் சமந்தா மனைவியாக இருக்கும்போதே காதலியுடன் போஸ் கொடுத்த நாக சைதன்யாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா. இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.

நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா

நடிகை சமந்தாவின் யசோதா டிரெய்லரை தமிழில் சூர்யா, தெலுங்கில் விஜய்தேவரகொண்டா, கன்னடத்தில் ரஷ்கித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான், இந்தியில் வருண் தவான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து இன்ஸ்டாகிராமில், சமந்தா தனது மணிக்கட்டில் டிரிப்சுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

samantha-naga-chaitanya-divorce

காதலியுடன் புகைப்படம் எடுத்த நாகசைதன்யா

இந்நிலையில், தற்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், நாகசைதன்யா, சமந்தாவுடன் சேர்ந்து வாழ்ந்தபோதே காதலியுடன் புகைப்படம் எடுத்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமந்தாவுடன் சேர்ந்து ரேஸ் காரில் சென்ற நாகசைதன்யா, எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, அந்த பதிவில், திருமதி மற்றும் காதலி என்று பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதைப் பார்த்த அவர்களது ரசிகர்கள் நீங்களும், சமந்தாவும் பிரிந்துவிட்டீர்கள் என்பதையே எங்களால் இன்னும் நம்பவே முடியவில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தயவு செய்து நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்துவிடுங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.