எனக்கு 24 வயதுதான்; ஆனால் அவனுக்கு 57.. நடுரோட்டில் கணவர் செய்த செயல் - மனைவி தர்ணா!

Marriage Crime Salem
By Sumathi Feb 12, 2024 05:01 AM GMT
Report

2வது திருமணம் செய்த பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2வது திருமணம்

சேலம், திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி(26). இவருக்கு 6 வருடங்களுக்கு முன் கண்ணன் என்பவருடன் திருமணம் முடிந்து இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

salem

கொரோனாவால் கணவன் உயிரிழந்த நிலையில், ஆர்த்திக்கு 2வது திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அப்போது, மனைவியை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையான அமெரிக்க வாழ் இந்தியர் பாஸ்கர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தொடர்ந்து. முதல் கணவருக்கு பிறந்த இரு குழந்தைகள் இடையூறாக இருப்பதாக பாஸ்கர் அவ்வப்போது சண்டையிட்டுள்ளார். இந்நிலையில், ஆர்த்தி தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு, கணவர் பாஸ்கருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது மனைவி ஆர்த்தி மற்றும் அவரது இரு குழந்தைகளை நடுரோட்டில் விட்டுவிட்டு பாஸ்கர் தனியாக சென்றதாக கூறப்படுகிறது.

கணவனுக்கு 2வது திருமணம்; கோலாகலமாக நடத்திய மனைவி - வலுக்கும் எதிர்ப்பு!

கணவனுக்கு 2வது திருமணம்; கோலாகலமாக நடத்திய மனைவி - வலுக்கும் எதிர்ப்பு!

மனைவி தர்ணா 

இதனால், தவித்த மனைவி அவரை பல இடங்களில் தேடியுள்ளார். ஒருகட்டத்தில் அவருக்கு சொந்தமான விடுதியில் அவர் இருப்பதை அறிந்த ஆர்த்தி உறவினர்களையும் அங்கு அழைத்துள்ளார். அனைவரும் அங்கு சென்றதில் பாஸ்கர் மற்றும் அவரது வழக்கறிஞருடன் வாக்குவாதம் முற்றியுள்ளது.

baskaran - arthi

உடனே சம்பவம் குறித்து போலீஸார் விரைந்து வந்து பாஸ்கரனை மீட்டு தங்களது வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மனைவி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும், முறைப்படி திருமணம் செய்த தன்னைக் கொடுமைப்படுத்தி, தனது இரண்டு மகன்களை வெளியேற்றிய கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.