கணவனுக்கு 2வது திருமணம்; கோலாகலமாக நடத்திய மனைவி - வலுக்கும் எதிர்ப்பு!

Marriage Rajasthan
By Sumathi Dec 02, 2023 10:13 AM GMT
Report

கணவனுக்கு 2வது திருமணம் செய்து வைக்கும் விநோத நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

2வது திருமணம்

ராஜஸ்தான், ராம்தேவ் கிராமத்து மக்கள் தங்களது பழமையான பழக்க வழக்கங்களை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி, இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து கொள்கின்றனர்.

rajasthan

குறிப்பாக, முதல் மனைவி தனது கணவனின் இரண்டாவது மனைவியை வரவேற்கிறார். திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் முதலில் திருமணம் செய்து வந்த பெண்ணே செய்கிறார்.

இரண்டாவது திருமணம் செய்ய இனி... அரசிடம் அனுமதி அவசியம்! எங்கே?

இரண்டாவது திருமணம் செய்ய இனி... அரசிடம் அனுமதி அவசியம்! எங்கே?

இளைஞர்கள் எதிர்ப்பு

அதனைத் தொடர்ந்து, இரண்டு பெண்களும் ஒரே குடும்பத்தில் சகோதரிகளை போல் வாழ்கின்றனர். அவர்களுக்கு இடையில் சண்டைகள் கூட எதுவும் வருவதில்லையாம். இதற்கு காரணம் என்னவென்றால், முதலில் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு குழந்தை பிறக்காது என்பது ஐதீகம்.

கணவனுக்கு 2வது திருமணம்; கோலாகலமாக நடத்திய மனைவி - வலுக்கும் எதிர்ப்பு! | Rajasthan Wife Remarries Her Husband 2Nd Time

அப்படியே குழந்தை பிறந்தாலும் அது பெண் குழந்தையாகத் தான் பிறக்குமாம். அதனால் ஒவ்வொரு ஆணும் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதாக தெரிவிக்கின்றனர். தற்போது இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த வழக்கத்தை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.