தாலி கட்டாம குடும்பம் நடத்திட்டிருக்கேன்னு கேவலப்படுத்துறா - பிரபல நடிகர் கதறல்
முதல் மனைவி இல்லாத குற்றச்சாட்டை வைப்பதாக நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சரவணன்
நடிகர் சரவணன் சென்னை குன்றத்தூர் பகுதியில் அபார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறார். அங்கு 2 ஃபிளாட்டுகள் உள்ளன. ஒரு ஃபிளாட்டில் முதல் மனைவியும், இன்னொரு ஃபிளாட்டில் இரண்டாவது மனைவி மற்றும் மகனுடனும் வசித்து வருகிறார்.

குழந்தை இல்லாததால் ஶ்ரீதேவி என்பவரை இரண்டாவதாக முதல் மனைவியின் சம்மதத்துடன் திருமணம் செய்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது முதல் மனைவி ஸ்ரீதேவி என்ற பெண்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.
வேதனை
கடந்த சில நாட்களாக சரவணன் 30 அடியாட்களுடன் தனது வீட்டிற்கு வந்து, வீட்டை விட்டு வெளியேறுமாறு ஆபாசமாக பேசி மிரட்டுகிறார். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நியாயத்தை பெற்று தர வேண்டும் என புகாரளித்திருந்தார்.

அதனையடுத்து, முதல் மனைவி சம்மதிச்சுதான் ரெண்டாவதா ஶ்ரீதேவியைக் கல்யாணம் செய்தேன். ஆனா இன்னைக்கு மீடியா முன்னாடி போய் அவ கூட தாலி கட்டாம குடும்பம் நடத்திட்டிருக்கேன்னு சொல்றாங்க. அதனால அவங்களை என்னுடைய முதல் மனைவின்னு கூட என்னால இப்பச் சொல்ல முடியலை.
என்னைப் பொறுத்தவரை என்னுடைய முதல் மனைவி செத்துட்டதாகவே நினைச்சுக்கிடுறேன் என்றவர், இந்த விஷயத்துல கூடிய சீக்கிரமே எனக்குச் சாதகமா தீர்வு கிடைக்கும். அப்ப விரிவாப் பேசலாம் எனத் தெரிவித்துள்ளார்.
700 மில்லியன் டொலரை வெளிநாடுகளுக்கு கடத்திய இலங்கையில் முன்னணி வர்த்தக நிறுவனம்! சி.ஐ.டி விசாரணையில் அம்பலம் IBC Tamil
சொத்து வரி விதிப்பு! IMF - இன் வலியுறுத்தலுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு IBC Tamil