"என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை" - பிக் பாஸ் பிரபலம் சரவணனின் மனைவி கதறல்!
பிக் பாஸ் பிரபலமான சரவணன் தன்னை மிரட்டுவதாக கூறி அவரது மனைவி புகாரளித்துள்ளார்.
நடிகர் சரவணன்
பருத்தி வீரன் திரைப்படத்தில் சித்தப்பாவாக நடித்து புகழ் பெற்றவர் சரவணன். இவர் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்த்தியில் போட்டியாளராக பங்கேற்றார்.
தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவரது மனைவி சூரியஸ்ரீ, இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவரது மனைவி தலைமைச் செயலகத்தில் உள்ள முதலைமைச்சர் தனி பிரிவில் சரவணன் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இது குறித்து இவரது மனைவி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
புகார்
இதனை தொடர்ந்து, அவர், "நடிகர் சரவணன் காதலித்து தன்னை திருமணம் செய்து கொண்டார், சில ஆண்டுகளுக்கு முன் மவுலிவாக்கத்தில் நான் சம்பாதித்த பணம் மற்றும் நகைகளை வைத்து வீடு வாங்கினார்.
வாங்கிய வீட்டை அவரது பெயரில் பதிவு செய்து கொண்டார். பட வாய்ப்பு இல்லாத போது, தனது சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட்டார்.
பிக்பாஸ் சென்று வந்த பிறகு கையில் பணம் வந்தவுடன், ஸ்ரீதேவி என்ற பெண்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருவதாக கூறினார்.
கடந்த சில நாட்களாக சரவணன் தனது வீட்டிற்கு வந்து, வீட்டை விட்டு வெளியேறுமாறு ஆபாசமாக பேசி மிரட்டுகிறார்" என்று கூறியுள்ளார்.
மேலும் 30, அடி ஆட்களுடன் வந்து மிரட்டுவதாகவும், இது தொடர்பாக அரசு தலையிட்டு உரிய நியாயத்தை பெற்று தர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.