டாஸ்மாக்கில் QR-CODE மூலம் மது விற்பனை - மதுப்பிரியர்கள் குஷி!

Tamil nadu TASMAC
By Vidhya Senthil Sep 26, 2024 06:29 AM GMT
Report

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் க்யூ- ஆர் கோடு மூலம் மது விற்பனை செய்யும் முறையைத் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

டாஸ்மாக் 

தமிழ் நாட்டில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுப்பாட்டில்களுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

TASMAC

இதற்காக அரசு அதிகாரிகளும் அவ்வப்போது டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தி, கூடுதலாக வசூலிக்கும் கடை ஊழியர்களை பணியிடைநீக்கம் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.

'இந்த' தேதியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - ஷாக் கொடுத்த அரசு!

'இந்த' தேதியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - ஷாக் கொடுத்த அரசு!

ஆனாலும் தொடர்ந்து புகார்களும் , அது தொடர்பான விடியோக்களும் வந்த வண்ணம் இருந்தனர். இந்த சுழலில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க புதிய திட்டத்தை டாஸ்மாக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

 க்யூ- ஆர் கோடு

மதுபாட்டில் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையிலேயே, மதுபாட்டில்கள் மீது, விற்பனை விலையுடன் கூடிய ‘க்யூ-ஆர்’ கோடு ஒட்டப்படும். அந்த மதுபாட்டில்கள், தொழிற்சாலையை விட்டு வெளியேகொண்டு வருவது முதல் மதுபாட்டில்கள் விற்பனையாவது வரை அவை கண்காணிக்கப்படுகின்றன.

QR-CODE

மேலும் , க்யூ-ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, மின்னணு பரிவர்த்தனையில் வழியாகப் பணம் செலுத்தி மதுபானங்களுக்குப் பில்லை பெறும் வசதியை டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

முதல்கட்டமாக, ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் தலா 10 கடைகளில் இந்த வசதி சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அமல்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.