'இந்த' தேதியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - ஷாக் கொடுத்த அரசு!
மிலாது நபி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக்
தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது. இங்கு 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.
இதுதவிர தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள், பப்புகள் என தனியாக உள்ளன. இந்த மதுக்கடைகள் எல்லாம் வருடத்தில் சில முக்கியமான நாட்களில் மூடப்படுவது வழக்கம்.
விடுமுறை
இந்நிலையில், மிலாடி நபியையொட்டி, டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், கிளப் சார்ந்த பார்கள் செயல்பட சென்னை ஆட்சியர் ஜகடே தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
தடையை மீறி விற்பனை செய்தால் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.