மத உணர்வை தூண்டும்.. ஹலால் முத்திரையிட்ட பொருட்களுக்கு தடை - அரசு அதிரடி உத்தரவு!
ஹலால் முத்திரையிட்ட பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.
முத்திரைக்கு தடை
இஸ்லாமிய மத்தில் அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பொருள் அல்லது செயலை ஹலால் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இறைச்சி, உணவு வகைகள், மருந்துப்பொருட்கள், சிகை அலங்கார பொருட்கள் என பல்வேறு பொருட்கள் ஹலால் முத்திரையிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தற்பொழுது உத்திர பிரதேசத்தில், இந்த ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த முத்திரையிடப்பட்ட பொருட்களை உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது.
அரசு உத்தரவு
இந்நிலையில், உணவுப்பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க அரசின் உணவுப்பொருள் பாதுகாப்பு சட்டம் உள்ள நிலையில் ஹலால் முத்திரை வழங்கும் நடைமுறை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் உணவுப்பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து சான்று வழங்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
மேலும், போலியான ஹலால் முத்திரையிட்டு அளித்து மக்களின் மத உணர்வுகளை தூண்டும் வகையில் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க நிறுவனங்கள் முயற்சித்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் அந்த ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய உத்திர பிரதேச அரசு தடை விதித்துள்ளது.