இந்தியாவில் 14 மருந்துகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை - காரணம் என்ன?

Government Of India
By Thahir Jun 04, 2023 04:08 AM GMT
Report

சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சாதாரண உடல்நலக் கோளாறுகளுக்கான 14 மருந்துகளை தடை செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

14 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை 

மத்திய அரசின் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் பரிந்துரையின் கீழ் அண்மையில், கலவை மருந்துகள் அடங்கிய எஃப்டிசி ரக மருந்துகளில் பல கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

ஆய்வின் முடிவில் அவற்றில் 14 மருந்துகளால் மனிதர்களின் உடல்நலனுக்கு அபாயம் ஏற்படலாம் எனத் தெரிய வந்தது.

இந்தியாவில் 14 மருந்துகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை - காரணம் என்ன? | 14 Drugs Banned In India

இதனையடுத்து பொதுமக்களின் நலன் கருதி 14 எஃப்டிசி ரக மருந்துகள் தடைக்கு ஆளாகி உள்ளன. அதன்படி, இந்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகம் என அனைத்தும் மத்திய அரசால் தடை செய்யப்படுகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தடைக்கு ஆளாகி உள்ள கலவை மருந்துகளின் முழுமையான பட்டியல் இதோ: 

1. Salbutamol + Etofylline + Bromhexine

2. Ammonium Chloride + Sodium Citrate + Chlorpheniramine Maleate + Menthol

3. Phenytoin + Phenobarbitone Sodium

4. Chlorpheniramine + Codeine Phosphate + Menthol Syrup

5. Salbutamol + Bromhexine

6. Paracetamol + Bromhexine + Phenylephrine + Chlorpheniramine + Guaiphenesin

7. Dextromethorphan + Chlorpheniramine + Guaiphenesin + Ammonium Chloride

8. Nimesulide + Paracetamol dispersible tablets

9. Amoxicillin + Bromhexine

10. Pholcodine + Promethazine

11. Chlorpheniramine Maleate + Dextromethorphan + Guaiphenesin + Ammonium Chloride + Menthol

12. Chlorpheniramine Maleate + Codeine Syrup

13. Ammonium Chloride + Bromhexine + Dextromethorphan

14. Bromhexine + Dextromethorphan + Ammonium Chloride + Menthol