7 பேரின் உயிர்களை பறித்த சம்பவம்.. மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன? முத்தரசன்!

Fire Accident Dindigul
By Vidhya Senthil Dec 12, 2024 06:35 PM GMT
Report

திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் விபத்து கால தடுப்பு சாதனங்கள் எளிதில் கையாளும் வசதியும் இருந்ததா? என்பதை விசாரிக்க வேண்டும் என இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

 தீ விபத்து

திண்டுக்கல் மாநகரின் திருச்சி சாலையில் இருந்த தனியார் மருத்துவமனையில் நேற்று (12) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒரு குழந்தை உட்பட 7 பேர் மரணமடைந்தனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

முத்தரசன்

நான்கு மாடி கொண்ட மருத்துவமனை கட்டிடம் விபத்து கால நெருக்கடிகளை எதிர் கொள்ளும் வசதியும், விபத்து கால தடுப்பு சாதனங்கள் எளிதில் கையாளும் வசதியும் இருந்ததா? என்பதை விசாரிக்க வேண்டும்.

ஆளுநர் அரசியல் கட்சி தலைவர் போல் பகிரங்கமாக செயல்படுகிறார் - முத்தரசன் விமர்சனம்

ஆளுநர் அரசியல் கட்சி தலைவர் போல் பகிரங்கமாக செயல்படுகிறார் - முத்தரசன் விமர்சனம்

முத்தரசன்

விபத்தில் மரணமடைந்த குடும்பங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பங்களுக்கு, மருத்துவமனை நிர்வாகமும், அரசும் உரிய இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனை தீ விபத்து

முன்னதாக, திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த சிறுமி உள்பட 6 பேரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.