ஆளுநர் அரசியல் கட்சி தலைவர் போல் பகிரங்கமாக செயல்படுகிறார் - முத்தரசன் விமர்சனம்
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சி தலைவர் போல் பகிரங்கமாக செயல்படுகிறார் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் அவருக்கான மரியாதையை இழந்துவிட்டார்
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சி தலைவர் போல் பகிரங்கமாக செயல்படுகிறார். ஆளுநர் அவருக்கான மரியாதையை இழந்துவிட்டார்.
சட்டமன்ற உறுப்பினர்களை ஆடு, மாடுகளை போல் பாஜக விலை கொடுத்து வாங்குகிறார்கள். பாஜகவுக்கு ஒவ்வாத தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பாஜக போட்டி அரசு நடத்துகிறது.
பிரதமர் பொய் சொல்லக்கூடாது. மொழியை பற்றி உயர்வாக பேசிவிட்டு மொழி வளர்ச்சிக்கு பிரதமர் உதவவில்லை. உலகின் மூத்த மொழி தமிழ் என வாரணாசி தமிழ் சங்கமத்தில் புகழும் பிரதமர்.
நிதி ஒதுக்கீட்டில் தமிழுக்கு முக்கியதுவம் அளிக்கவில்லை; தமிழ் மொழிக்கு முக்கியத்துவத்தை அளிக்காமல் போலியாக பிரதமர் உரையாற்றுகிறார் என தெரிவித்துள்ளார்.