சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
ஓணம் பண்டிகையின் சிறப்புப் பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சாதி, மாத பேதம் இன்றி மலையாளம் மொழி பேசும் மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மலர்களால் ஆன அத்திப்பூ கோலம் இடப்பட்டிருக்கும்.
இந்த நாளில், புத்தாடை அணிந்து, விதவிதமான உணவு பொருட்களைச் சமைத்து உற்றார் உறவினர்களுக்குக் கொடுத்து மகிழ்கின்றனர்.அதன்படி, கேரளாவில் இந்த வருடத்திற்கான ஓணம் பண்டிகை நாளை செப்டம்பர் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடைப்பெற்றது . இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
சபரிமலை
அதே போல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளது. அதன்படி மாலை 5 மணிக்கு மேல் சாந்தி மகேஸ் நம்பூதிரி நடையைத் திறந்து வைக்க உள்ளார்.
இன்று முதல் வரும் வரும் 21 ஆம் தேதி வரை சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளது. மேலும் இந்த பூஜையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.