4000 கோடியில் சபரிமலை விமான நிலையம் - பிரதமர் மோடி வரவேற்பு!

Narendra Modi Kerala Sabarimala
By Sumathi Apr 19, 2023 09:09 AM GMT
Report

சபரிமலையில் ரூ.4,000 கோடியில் புதிய விமான நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை

கேரளாவில் பிரசித்தி பெற்ற இடம் சபரிமலை ஐயப்பன் கோவில். இங்கு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கூட பலர் வந்து செல்கின்றனர்.

4000 கோடியில் சபரிமலை விமான நிலையம் - பிரதமர் மோடி வரவேற்பு! | Airport At Sabarimala Central Pm Modi

இந்நிலையில், பரிமலையில் விமான சேவையும் தொடங்கப்பட உள்ளது. சுமார் ரூ.4,000 கோடி மதிப்பில் 2,250 ஏக்கர் பரப்பில் அரசு, தனியார் பங்களிப்பு திட்டத்தில் புதிய விமான நிலையம் கட்டப்படும். கேரள அரசின் தொழில் வளர்ச்சி கழகம், விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்’ என விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

விமான நிலையம்

புதிதாக அமைக்கப்படும் விமான நிலையம் கேரளாவின் 5-வது விமான நிலையம் ஆகும். இது திருவனந்தபுரத்தில் இருந்து 138 கி.மீ., கொச்சியில் இருந்து 113 கி.மீ., கோட்டயத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.

புதிய விமான நிலையத்தில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயில் 48 கி.மீ. தொலைவில் இருக்கிறது. தொடர்ந்து இதற்கு ‘சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. இது சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலாவுக்கு நல்ல செய்தி’ என பிரதமர் மோடி வரவேற்பு அளித்துள்ளார்.