மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி

ayyapan temple Sabarimala
By Anupriyamkumaresan Nov 15, 2021 08:16 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில்நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள ஆழியில் தீ மூட்டப்படும். இன்று நடைபெறும் பூஜைகளுக்கு பிறகு நாளை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும், பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலையில் புகழ்பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை 2021ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி | Sabarimalai Ayyapan Temple Open Today

தினசரி 1,000 பக்தர்களும், சனி-ஞாயிறு ஆகிய நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல மகர விளக்குபூஜை நாட்களில் தினசரி 5 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால், குளிப்பதற்கு வசதியாக பம்பை திருவேணியில் சிறப்பு குளியல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழும், முககவசம் அணிந்தும், சமூக இடைவெளி விட்டும் மலை ஏறவேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.