அத மட்டும் பண்ணிடாதீங்க.. CSK டீமுக்கு வாங்குறோம் - சத்தியம் வாங்கிய ருதுராஜ்!
ஆர்சிபி கேப்டன் பாஃப் டு பிளெஸ்ஸிஸ் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசியுள்ளார்.
சென்னை - பெங்களூரு
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நான்காவது அணியை தீர்மானிக்கும் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், அடுத்த வருடம் நடைபெறும் மெகா ஏலத்தில் ஆர்சிபி கேப்டன் பாஃப் டு பிளெஸ்ஸிஸ் சிஎஸ்கே மீண்டும் வாங்குவதற்கு வாய்ப்புள்ளதாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
அதனால் இந்த வருடம் சேப்பாக்கத்தில் மோதிய போட்டியின் போது ஸ்கூப் ஷாட்டை அடிக்காதீர்கள் என்று ஏற்கனவே சாத்தியம் செய்யுமாறு அவரிடம் கேட்டதாகவும் ருதுராஜ் ஜாலியாக கூறியுள்ளார்.
நான் விரும்பவில்லை
மேலும், இந்த போட்டியிலும் தனது முன்னாள் அணியான சிஎஸ்கே மீது டு பிளேஸிஸ் கொஞ்சம் அன்போடு விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கலகலப்பாக பேசியுள்ளார்.
இதுதொடர்பாக ருதுராஜ் கூறியதாவது "கடந்த போட்டியில் என்னுடைய முழங்கை இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று டு பிளேஸிஸ் என்னிடம் கூறினார். அதற்கு நான் “ஸ்கூப் ஷாட் அடிக்க மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள். அந்த ஃபீல்டரை உள்வட்டத்திற்குள் வைத்து உங்களுக்கு வேறு ஒருவரை நிறுத்துகிறேன்” என்று சொன்னேன். அவர் அனைத்து திசைகளிலும் அடிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆனால், ஸ்கூப் ஷாட்டை அதுவும் எங்களுக்கு எதிராக அடிப்பதை நான் விரும்பவில்லை. சிஎஸ்கே அணிக்கு எதிராக நீங்கள் கொஞ்சம் அன்போடு இருக்க வேண்டும். இருப்பினும் எங்களுக்கு எதிராக அவர் அந்த ரன்களை அடிப்பதை என்கரேஜ் செய்ய மாட்டேன். குறிப்பாக அடுத்த வருடம் மெகா ஏலத்தில், அவர் மீண்டும் எங்கள் அணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது” என்று கலகலப்பாக பேசியுள்ளார்.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan
