RCB vs CSK: தோனியின் கடைசி போட்டி? நேற்று அவுட்டானதும்.. அவர் சொன்னத கவனிச்சீங்களா!
தோனி அவரது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடியதாக நினைக்கவில்லை என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.தோனி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நான்காவது அணியை தீர்மானிக்கும் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இதில் தோல்வியை சந்தித்த சென்னை அடுத்து சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இதனிடையே சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இந்த வருடத்துடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பத்தி ராயுடு
மேலும், நேற்று நடைபெற்ற ஆர்சிபி - சிஎஸ்கே இடையிலான போட்டியுடன் அவர் ஓய்வை அறிவிப்பார் என்றும் கருத்துகள் காணப்பட்டன. இந்நிலையில் தோனி அவரது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடியதாக நினைக்கவில்லை என்று முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போட்டி முடிந்த பிறகு அவர் பேசியதாவது "இதனை எம்.எஸ்.தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி என நினைக்கவில்லை. அவரது கிரிக்கெட் பயணத்தை இப்படி முடிப்பதை நான் விரும்பவில்லை. அவர் ஆட்டமிழந்ததும் ஏமாற்றத்துடன் காணப்பட்டார்.
பிளே-ஆஃபுக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என நினைத்தார். பிசிசிஐ இம்பாக்ட் விதியை நீக்கக்கூடாது. தோனி விளையாடுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். ஆனால், அந்த முடிவு பிசிசிஐயின் கையில்தான் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
