தோனி ஓய்வு பெற்றாலும் பிரச்சனை இல்லை; ருதுராஜ் செய்த மாஸ் சம்பவம் - வைரல் Video!
புனேரி பாப்பா - சத்ரபதி சம்பாஜி கிங்ஸ் இடையேயான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட் கீப்பிங் செய்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட்
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நூலிழையில் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. மேலும், இந்த தொடரில் கேப்டன்சியை ருதுராஜுக்கு கைமாற்றிய தோனி, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இதனை உணர்ந்துள்ள தற்போதைய சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ், தோனி வழியில் விக்கெட் கீப்பிங் + கேப்டன்சி இரண்டையும் செய்ய திட்டமிட்டு கீப்பிங் கிளவுஸை கையில் எடுத்துள்ளார்.
விக்கெட் கீப்பிங்
மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடர் 2024 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் புனேரி பாப்பா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடி வருகிறார். இந்நிலையில் புனேவில் உள்ள எம்சிஏ ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும்,
புனேரி பாப்பா - சத்ரபதி சம்பாஜி கிங்ஸ் இடையேயான போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங் செய்துள்ளார். கையில் கிளவுஸுடன் பவுலர்கள் வீசிய சில பந்துகளை பிடிக்க தவறவிட்டாலும், ஒயிடு பந்துகளை அதிரடியாக தடுத்து தோனியின் வழியை கையில் எடுத்துள்ளார்.
Ruturaj Gaikwad ??????? ??? ??????? for Puneri Bappa ?#MaharashtraPremierLeague#JioCinemaSports#MPLonJioCinema #MPLonSports18 pic.twitter.com/4pL4X1k7j5
— Sports18 (@Sports18) June 17, 2024