யாரு சாமி நீ? 18 சிக்ஸ்.. டி20 போட்டியில் அதிவேக சதம் - எஸ்டோனியா வீரர் சாதனை!

Cricket Sports
By Jiyath Jun 18, 2024 10:40 AM GMT
Report

டி20 வரலாற்றில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை எஸ்டோனிய அணி வீரர் படைத்துள்ளார். 

எஸ்டோனியா  வெற்றி

எஸ்டோனியா மற்றும் சைப்ரஸ் அணிகளுக்கு இடையே 6 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சைப்ரஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்களை குவித்தது.

யாரு சாமி நீ? 18 சிக்ஸ்.. டி20 போட்டியில் அதிவேக சதம் - எஸ்டோனியா வீரர் சாதனை! | Ahil Chauhan New Record By Fastest T20 Century

இதனையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய எஸ்டோனியா அணி வெறும் 13 ஓவரில் 194 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தோனி ஓய்வு பெற்றாலும் பிரச்சனை இல்லை; ருதுராஜ் செய்த மாஸ் சம்பவம் - வைரல் Video!

தோனி ஓய்வு பெற்றாலும் பிரச்சனை இல்லை; ருதுராஜ் செய்த மாஸ் சம்பவம் - வைரல் Video!

அதிவேக சாதம்  

இதில் எஸ்டோனியா அணி பேட்ஸ்மேன் வெறும் 27 பந்தில் 5 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள் என துவம்சம் செய்து 105 ரன்கள் அடித்து அதிவேக டி20 சதத்தை பதிவுசெய்தார். மேலும், 41 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 18 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு 144 ரன்கள் விளாசினார்.

யாரு சாமி நீ? 18 சிக்ஸ்.. டி20 போட்டியில் அதிவேக சதம் - எஸ்டோனியா வீரர் சாதனை! | Ahil Chauhan New Record By Fastest T20 Century

அதேபோல் 18 சிக்ஸர்களை பறக்கவிட்டு டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 33 பந்துகளில் அடிக்கப்பட்டதே அதிவேக சதமாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.