நல்ல வீரர் தான்.. இறங்கிப்போய் பேசியும் கேட்கல; அதனால் நீக்கி விட்டேன் - எம்எஸ் தோனி பளீச்!
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவரை குறித்து முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி பேசியுள்ளார்.
எம்.எஸ்.தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி. இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதனிடையே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூருவிடம் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.
மேலும், தற்போது எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்த பேச்சுகளும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய தோனி "எங்களது (சிஎஸ்கே) அணியில் நாங்கள் ஒரு நல்ல வீரரை தேர்வு செய்தோம்.
கேட்கவில்லை
ஆனால் அவர் அணியின் சூழலை கருத்தில் கொண்டு விளையாடாமல் தனிப்பட்ட முறையில் விளையாடி வந்தார். அதனால் 2,3 அடி கூட இறங்கிச் சென்று அவரிடம் பேசிப் பார்த்தோம். நீங்கள் அணிக்காக சிறப்பாக செயல்படுங்கள் என்றோம்.
ஆனால் அதை அவர் கொஞ்சமும் கேட்கவில்லை. எனவே அவரை அணியிலிருந்து நீக்குவது தான் சரியான முடிவு. அணியின் சூழலை புரிந்து கொண்டு விளையாட வில்லை என்றால் அவரை நீக்குவதை தவிர்த்து வேறு வழி கிடையாது.
ஒரு நபருக்காக மொத்த அணியும் மாறுவதை நான் விரும்பவில்லை. அது மிகவும் தவறு. மிகச் சிறந்த வீரராக இருந்தாலும் அவரை அணியிலிருந்து நீக்கி தான் ஆக வேண்டும். அவருடைய இடத்தை வேறு யாராவது வந்து நிரப்புவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.