பாலியல் உறவுக்கான தனி அமைச்சகம்; அரசின் புதிய திட்டம் - ஷாக் பின்னணி!
செக்ஸிற்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த அதிபர் விளாடிமிர் புதின் திட்டமிட்டுள்ளார்.
செக்ஸ் அமைச்சகம்
ரஷ்யாவுக்கும் - உக்ரைன் நாட்டிற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இருநாட்டு எல்லையில் உள்ள ஏராளமான பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதனால் இந்த இரு நாடுகளிலும், மக்கள் தொகை எண்ணிக்கையில் கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் செக்ஸ் விவகார அமைச்சகத்தை ஏற்படுத்த ரஷ்ய அதிபர் புதின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
புதின் முடிவு
மேலும், மக்கள் தொகையை அதிகரிக்க மற்ற எந்தெந்த வழிகளை கையாளலாம் என்பது பற்றி நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அதன்படி, வீட்டிலேயே தங்கி தங்களது குழந்தைகளை வழக்கும் பெண்களுக்கு அரசு தரப்பில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். திருமண ஜோடிகள் உடலுறவுக்காக ஹோட்டல்களில் அறைகளை எடுத்துக் கொள்ள
அரசு பணம் ஒதுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் ரஷ்ய அரசு மக்கள் தொகையை பெருக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.