14 - 15 வயது சிறுமிகள் விருப்பப்படி பாலியல் உறவு - திருத்தப்பட்ட சட்டம்!
பாலியல் உறவில் ஈடுபடக்கூடிய வயதை பெண் குழந்தைகளுக்கு குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
பாலியல் உறவு
இலங்கையில், குற்றவியல் சட்டத்தின் 19 வது அத்தியாயத்தை திருத்துவதற்கான மசோதா வெளியிடப்பட்டது.
அதில், பிப்ரவரி 2024, 13ஆம் தேதி வெளியிடப்பட்ட தண்டனைச் சட்டத்தின் படி, 14 முதல் 16 வயதுக்குட்பட்ட பெண் குழந்தை தனது சம்மதத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் தண்டனையை எளிதாக்க முன்மொழியப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நீதியமைச்சர் மற்றும் பாராளுமன்றத்திற்கு எழுத்து மூலம் உடன்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் கண்டனம்
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்படும் தண்டனையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், குற்றவியல் சட்டத்தின் 19 வது அத்தியாயத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ள திருத்தங்களை உடனடியாக இடைநிறுத்துமாறு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் நீதியமைச்சரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.