அணுகுண்டு வீச இடத்தை தேர்வு செய்த ரஷ்யா! மிரண்டுபோன உக்ரைன் - அமெரிக்கா!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அணுக்குண்டு வீசுவதற்கான இடத்தை ரஷ்யா தேர்வு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன்
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் போரால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
மேலும் ரஷ்யாவை எதிர்க்கத் தேவையான அனைத்து வகையான உதவிகளும் அமெரிக்கா சார்பில் உக்ரைனுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.அதே போல் ரஷ்யாவிற்கு மறைமுகமாகச் சீனா ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தலையிடக்கூடாது.
இதனை மீறும் பட்சத்தில் அணுக்குண்டு வீசுவோம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் அணுக்குண்டு வீசுவதற்கான இடத்தை ரஷ்யா தேர்வு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ரஷ்யா - உக்ரைன் போருக்கு நடுவே ஆர்க்டிக் (Arctic) பகுதியில் அணுக்குண்டை வீச ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ‛தி டெய்லி’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து ரஷ்யாவின் அணுக்குண்டு சோதனை தளத்தின் இயக்குநர் ரியல் அட்மிரல் ஆண்ட்ரே சினிட்டின் தெரிவித்துள்ளதாவது :
அணுக்குண்டு
ஆர்க்டிக்கில் நம் நாட்டின் பாதுகாப்பு கருதி பல்வேறு ஆயுத சோதனை நடத்துவதற்குத் தயாராக இருக்கிறோம். தற்போதைய சோதனையானது அணுஆயுதம் இல்லாத வகையில் நாட்டை பாதுகாக்கத் தேவையான பிற ஆயுதங்களுக்கான சோதனையாக இருக்கும்.
இவை உள்கட்டமைப்புகளைச் சோதிக்கும் வகையில் இந்த சோதனை இருக்கும். இது முழுக்க முழுக்க ரஷ்யாவைப் பாதுகாப்பதற்காகத் தான் மேற்கொள்ளப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக 1990ஆம் ஆண்டு ரஷ்யா சார்பில் இந்த இடம் அணுஆயுத சோதனைக்குப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.