நிறைய குழந்தை பெத்துக்கோங்க; கெஞ்சிய அதிபர் புதின் - என்ன காரணம்?
நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்ய அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிறப்பு விகிதம்
ரஷ்யாவில், 1990ம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள அரசே அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைனுடன் நடந்து வரும் போரின் காரணமாக நாட்டின் மக்கள் தொகை குறைந்துள்ளது.
புதின் வேண்டுகோள்
இது தேசத்தின் எதிர்காலத்திற்கு பேரழிவு. வேலையில் மிகவும் பிஸியாக இருப்பது சரியான காரணம் அல்ல. ஆனால் ஒரு நொண்டி சாக்கு. இனப்பெருக்கத்திற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது.
வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் காபி இடைவெளியின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அங்கு தற்போதைய கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு தோராயமாக 1.5 குழந்தைகளாக உள்ளது. இது மக்கள்தொகை நிலைத்தன்மைக்கு தேவையான 2.1 க்கும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.