சீனப் பெண்ணை திருமணம் செய்த ஆண்டிப்பட்டி மாப்பிள்ளை - நாடு விட்டு பறந்த காதல்!
சீன நாட்டுப் பெண்ணை, ஆண்டிப்பட்டி இளைஞர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
கடல் கடந்த காதல்
தேனி, ஆண்டிபட்டி அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதன். பொறியியல் பட்டதாரியான இவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஐ.டி நிறுவனத்தில் வேலை கிடைத்த நிலையில்,
தனது மனைவி சரவண குமாரியுடன் அமெரிக்கா சென்றுள்ளார். அவர்களுக்கு தருண்ராஜ், கிரண்ராஜ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
உறவினர்கள் நெகிழ்ச்சி
இந்நிலையில், தருண்ராஜ் தான் பணிபுரியும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த சீன நாட்டை பூர்வீகமாகக் கொண்டவரும், அமெரிக்க கிரீன் கார்டு பெற்று வசித்து வரும் சுனோ ஜூ-வை காதலித்து வந்துள்ளார்.
இதனையறிந்த குடும்பத்தினர் கலந்து பேசி இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதனைத் தொடர்ந்து தேனி, கானாவிலக்கு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகள் தெரிவித்தனர்.