நார்வே பெண்னை கரம்பிடித்த கடலூர் இளைஞர் - திருமணம் கோலாகலம்!
நார்வே நாட்டு பெண்ணை கடலூர் இளைஞர் திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடல் கடந்த காதல்
கடலூர், செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். பிஎச்டி படித்து முடித்து நார்வே நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு பணிபுரியும் நார்வே போர்கன் பகுதியை சேர்ந்த சிவானந்தினி என்பவரை காதலித்து வந்துள்ளார்.
அதனை தனது குடும்பத்தினரிடம் இருவரும் தெரிவித்துள்ளனர். இருவீட்டாரும் திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இருவருக்கும் கடலூர் மஞ்சக் குப்பத்தில் திருமணம் நடைபெற்றது.
நெகிழ்ச்சி சம்பவம்
இரு வீட்டாரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். நார்வே பெண்ணை கடலூர் இளைஞர் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நார்வே நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ் கற்றுக் கொண்டதாகவும் தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும் என்பதால் தமிழரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இருந்த நிலையில் தற்போது தன்னுடைய கனவு நினைவாகியுள்ளதாக மணமகள் தெரிவித்துள்ளார்.