கடல் கடந்த காதல்; சீன பெண்ணை சோஷியல் மீடியாவில் காதலித்து கரம்பிடித்த கடலூர் இளைஞர்!
சீன பெண்ணை சோஷியல் மீடியாவில் காதலித்து கடலூர் இளைஞர் திருமணம் செய்துள்ளார்.
தமிழ் திருமணம்
கடலூர், வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
அதன்பின் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து இரு வீட்டார் சம்மதத்தையும் பெற்றுள்ளனர். இந்நிலையில், கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், தமிழக கலாச்சாரத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
கோலாகலம்
அதனைத் தொடர்ந்து பாலச்சந்தர் சகோதரர் பாலமுருகனுக்கும் திருமணம் நடைபெற்றது. ஒரே மேடையில் ஒரே நாளில் அண்ணன் மற்றும் தம்பிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மணமகன் இதுகுறித்து தெரிவிக்கையில், திருமணத்திற்கு முன்பு இருந்த காதலுடன் எங்களது வாழ்க்கை பயணத்தை ஆனந்தமாக கடப்போம் என நம்புகிறோம் எனக் கூறியுள்ளார்.