9 நாட்களுக்கு அதிர்ந்த பூமி; அப்படி ஒரு நிலச்சரிவு - விஞ்ஞானிகள் மிரண்ட சம்பவம்!
மிகப்பெரிய நிலச்சரிவு காரணமாக உருவான பெரிய அலை பூமியை உலுக்கியுள்ளது.
நிலச்சரிவு
கிரீன்லாந்தில் உள்ள தொலைதூர ஃபிஜோர்டில்(fjord) பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. அது ஒரு அலையை உருவாக்கியது. fjord என்பது செங்குத்தான மலைகளுக்கு இடையில் காணப்படும் நீண்ட ஒடுக்கமான கடல்.
இங்கு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, பூமியின் வழியாக ஒன்பது நாட்களுக்கு அதிர்வுகளை அனுப்பியுள்ளது, மேலும் உலகெங்கிலும் உள்ள நில அதிர்வு உணரிகளால் இது கண்டறியப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம்
மேலும் இது லண்டனில் உள்ள பிக் பென்னை விட இரண்டு மடங்கு உயரமான 200 மீட்டர் உயர அலையுடன் கூடிய மெகா சுனாமியை ஏற்படுத்தியுள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பருவநிலை மாற்றத்தால் இதுபோன்ற நிலச்சரிவுகள் மிகவும் பொதுவானதாகி வருகின்றன.
கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதால், இதுபோன்ற நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு மற்றும்
டேனிஷ் கடற்படை(Danish Navy) தலைமையில் நடைபெற்ற விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அசாதாரண நிகழ்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றுள்ளது.