மனைவியாக இருந்தாலும் பாலியல் உறவில் அதை செய்யக்கூடாது - புதிய சட்டம் அமல்!
மனைவியிடம் பாலியல் உறவில் சிலவற்றை செய்யக்கூடாது என தாலிபான் உத்தரவிட்டுள்ளனர்.
தாலிபான்
ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாலிபான்கள் இஸ்லாமில் போதிக்கப்பட்ட கருத்துகளை தீவிரமாக பின்பற்றுபவர்கள் ஆவார். தாலிபான்கள் மொத்த நாட்டையும் தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு ஏராளமான கட்டுப்பாடுகள் விதித்தனர்.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்கும் வகையில் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் மொத்தம் 35 வகையான அம்சங்களை கொண்டுள்ளது. அதில் பாலியல் உறவுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது Sodomy-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Sodomy என்பது இயற்கைக்கு மாறாக உறவு வைத்து கொள்வதாகும்.
புதிய சட்டம்
இதில் மனைவியாக இருந்தாலும் கூட பாலியல் உறவின்போது இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சட்டத்தில் முஸ்லிம்கள் இஸ்லாமியர் அல்லாதவர்களும் நட்பாக பழகக்கூடாது. அதேபோல் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அம்சங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்துக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுபோன்ற விஷயங்களை தாலிபான்கள் கைவிட வேண்டும் என்று பல நாடுகளில் இருந்து கோரிக்கைகள் வலுக்க தொடங்கி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க தற்போது போடப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை எப்படி தாலிபான்கள் கண்டுபிடித்து எந்த வகையான நடவடிக்கை எடுக்க உள்ளனர்? என்பது தொடர்பாக எந்த அம்சங்களும் தெரிவிக்கப்படவில்லை என்பதால் ஆப்கானிஸ்தானில் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.