ரம்மி விளம்பரங்களை வெளியிட தடை - மத்திய அரசு அதிரடி..!
ரம்மி போன்ற சில விளம்பரங்களை வெளியிட கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை நிகழ்வுகள் அரங்கேற்வதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டத்தை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு அதிரடி
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் பெட்டிங் போன்ற எந்த ஒரு விளம்பரத்தையும் ஒளிபரப்பு செய்யக்கூடாது என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், சமூக-பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தையும்,
இளைஞர்கள், குழந்தைகளிடையே எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சூதாட்ட விளம்பரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளன.
ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்
எனவே, இதுபோன்று மக்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் சூதாட்டம், பெட்டிங் போன்ற விளம்பரங்களைக் காட்சி ஊடகங்கள், செய்தித்தாள்கள், செய்தி நிறுவனங்கள் ஒளிபரப்பவோ, விளம்பரப்படுத்தவோ கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள், சமூக வலைத்தளங்களும் பொதுமக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரிக்கவோ வேண்டாம் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.