இந்த நியூஸ் எல்லாம் ஏன் இப்படி ஆகிடுச்சு : சமந்தா பற்றி வாய்திறந்த நாக சைதன்யா
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2010 ஆம் ஆண்டு காதலித்து மணந்தார்.
இந்த நிலையில் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இப்பட விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு , பிரிய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. அதே சமயம், தற்போது வரை சம்பந்தப்பட்ட சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று போது அவரிடம் விவாகரத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. கோவிலுக்கு வந்து இதை கேட்கிறீர்களே.... புத்தி இருக்கா" என மிகவும் கோபத்துடன் கேட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் விவாகரத்து குறித்து செய்தி நிறுவனங்கள் வெளியிடுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
சிறு வயதிலிருந்தே திரைத்துறை வாழ்க்கையை வேறு தனித் தனி வாழ்க்கை வேறு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏனென்றால் என் குடும்பத்தில் இருந்து வந்த பழக்கம் அம்மாவும் அப்பாவும் படங்களில் நடித்து முடித்த பிறகு வீட்டிற்கு வருவார்கள். சிறுவயதிலிருந்தே அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் படம் குறித்தும் நடந்த சம்பவம் குறித்து பேசி நான் பார்த்ததில்லை.
அதனால் இயல்பிலிருந்து எனக்கு அந்த குணம் வந்தது. இது ஒரு நல்ல பழக்கம் என்பதால் நான் அதை தற்போது வரை கடைப்பிடித்து வருகிறேன். விவாகரத்து குறித்து பேசுவது கொஞ்சம் வேதனையாக இருந்தது.
பொழுதுபோக்கு ஏன் இந்த வழியில் செல்கிறது? என்ற எண்ணம் எழுகிறது. இன்று ஒரு செய்தி வந்தால், நாளை இன்னொரு செய்தி வரும். இன்றைய செய்தி மறந்துவிடுக்கிறது. என் தாத்தா காலத்தில், பத்திரிக்கைகள் இருந்தன. ஒரு வாரத்திற்கு ஒருமுறை வரும். அதில் வரும் செய்தி ஒரு நீடித்தது.
ஆனால் இன்று ஒரு செய்தி வந்தால் மற்றொரு செய்தி மறைந்து விடுகிறது. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன் நான் கவலைப்படுவதே நிறுத்திவிட்டேன் எனக் கூறியுள்ளார்.