ஆடி மாதம் இதையெல்லாம் செய்யவே கூடாது - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
ஆடி மாதம் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து பார்க்கலாம்.
ஆடி மாதம்
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தாய் சந்திரன் தகப்பன் சூரியன் வீடான கடகத்திற்குள் நுழையும் மாதமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆடியில் என்னென்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆடி மாதத்தில் புதுமண தம்பதியரை பிரித்து வைப்பது என்பது அவர்கள் காலமெல்லாம் இணைப் பிரியாமல் வாழ வேண்டும் என்பதற்காக எனக் கூறப்படுகிறது.
என்ன செய்யக்கூடாது?
இந்த மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்வது, பெண் பார்க்கச் செல்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் வெளியூரில் இருந்தால் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழாவை ஒரே நாளில் வைக்கலாம்.
உள்ளூரில் இருந்தால் வைக்கக் கூடாது. கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தக்கூடாது. கிரஹப்பிரவேசம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஆடி மாதம் மட்டுமல்ல மற்ற எந்த மாதத்தின் தொடக்கத்திலும் மொட்டை அடிக்க கூடாது.
திருமணம் ஆன பெண் தாலி பிரித்து கோர்க்கலாம்.