Thursday, May 8, 2025

ஆட்டிப்படைக்கும் சனி வக்ரபெயர்ச்சி - இன்னமும்.. எந்த ராசிக்கு என்ன நடக்கும்?

Astrology
By Sumathi 10 months ago
Report

சனி வக்ர பெயர்ச்சி நடந்துள்ள நிலையில் அனைத்து ராசிக்கான பலன்களைப் பார்ப்போம்.

sani vakra peyarchi palangal

கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி உள்ளார். கும்பத்தில் சனி பின்னோக்கி சதய நட்சத்திற்கு செல்கிறார். இதனால் ஜூன் 30-ம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார். அக்டோபர் 5ம் தேதி மேலும் பின்நோக்கி சென்று அவிட்டம் நட்சத்திரத்தை அடைகிறார். 

மேஷம்: பணம் தேடி வரும். சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு வரும். புதிய வேலை கிடைக்கும்.

ரிஷபம்: அடுத்த 1 வருடம் உங்களுக்கு பண கஷ்டம் இருக்காது. பொருளாதார ரீதியாக நல்ல பலன் கிடைக்கும்.

மிதுனம்: போக்குவரத்தில் கவனமாக இருங்கள்.நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும். குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் கவனம் தேவை.

 கடகம்: வீடு கட்ட வாய்ப்புள்ளது. ஆனால் நிலத்தகராறு ஏற்படும்.

சிம்மம்: திருமணத்திலோ வேலையிலோ நீங்கள் எதிர்பார்க்காத பெரிய மாற்றம் நடந்து உங்கள் எதிர்காலத்தையே மாற்றும்.

கன்னி: சொந்தமாக வீடு, நிலம் வாங்கும் வாய்ப்பு. கடன்களை அடைக்கும் வாய்ப்பு. அரசு வேலை கூட தேடி வரும்.

துலாம்: பொருளாதார ரீதியாக நிலவிய கடன்கள் சரியாகும். அடுத்த 18 மாதங்கள் வாழ்க்கை புதிய உச்சத்தில் இருக்கும்.

விருச்சிகம்: வீட்டில் உள்ளவர்களுக்கு கடன் தொல்லை, சொத்துக்களை இழந்தது, நிலத்தை இழந்தது என்று எல்லாம் சரியாகும் வாய்ப்பு.

தனுசு: அகலக்கால் வைக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் முக்கியம். ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

மகரம்: குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தை பிறப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்களுக்கு கவனம் தேவை.

கும்பம்: நில பிரச்சனை தீரும். அப்பா மகன் இடையிலான உறவு சரியாகும்.

 மீனம்: நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.

புரட்டி எடுக்கப்போகும் செவ்வாய் - வசமாக சிக்கிக்கொண்ட ராசிகள்!

புரட்டி எடுக்கப்போகும் செவ்வாய் - வசமாக சிக்கிக்கொண்ட ராசிகள்!