இந்த 3 ராசி கூட திருமணமா? நோ சொல்லிடுங்க - விவாகரத்து கன்பார்ம்

Astrology Divorce
By Karthikraja Jun 21, 2024 04:46 PM GMT
Report

 ஜோதிடத்தின் படி இந்த 3 ராசியினரை திருமணம் செய்தால் விவாகரத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது.

மணமுறிவு

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். ஆனால் திருமணத்திற்கு இருவரின் மனமும் ஒத்துப்போனால் மட்டுமே அது கடைசி வரை நீடிக்கும். தற்போது காதல் திருமணங்கள் அதிகரித்தாலும் கூட விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மை குறைந்து வருவதால் மணமுறிவும் அதிகரித்து வருகிறது. 

divorce zodiac signs

மேலும் பிறந்த ராசியும், கிரங்களும் திருமண வாழ்வை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனடிப்படையில் எந்த ராசிக்காரர்களுக்கு மணமுறிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம். 

ஆப்பிள் நிறுவனத்தால் தான் விவாகரத்து - 53 கோடி நஷ்டஈடு கேட்கும் தொழிலதிபர் சொன்ன காரணம்

ஆப்பிள் நிறுவனத்தால் தான் விவாகரத்து - 53 கோடி நஷ்டஈடு கேட்கும் தொழிலதிபர் சொன்ன காரணம்

மேஷம்

மேஷ ராசியினர் , தன் வாழ்க்கை துணையுடன் உணர்ச்சிப்பூர்வமான தொடர்பை தேடக்கூடியவர்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த உணர்ச்சிப்பூர்வமான தொடர்பு துணையுடன் கிடைப்பதில்லை என உணரும் போது, அவர்கள் அந்த திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள நினைக்கின்றனர். அதனால் இந்த ராசியினருக்கு திருமண விவகாரத்திற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிம்மம் 

Leo simma raasi

சிம்ம ராசியினர் வாழ்க்கையில் விசுவாசத்திற்கு முன்னுரிமை கொடுக்கக்கூடியவர்கள். அது வேலை, திருமணம், நட்பு என அனைத்திலும் எதிர்பார்ப்பார்கள். தங்கள் திருமண வாழ்க்கையில் வாழ்க்கை துணையிடமும் விசுவாசத்தை எதிர்பார்ப்பார்கள். இதனால் வாழ்க்கைத்துணை ஏதேனும் வகையில் இவர்களை ஏமாற்றுவது போல் உணர்ந்தால், அதை சகித்துக்கொள்ள முடியாத இவர்கள் திருமண உறவை தூக்கி ஏறிய தயங்க மாட்டார்கள்.

மிதுனம்

மிதுன ராசியினர், வசீகர தன்மையுடன் இருந்தாலும் காதல், திருமண உறவில் முழு அர்ப்பணிப்புடன் இருக்க மாட்டார்கள். இதனால் உறவில் பல பிரச்னைகளை சந்திப்பார்கள். இவர்கள் தன்னுடைய துணையால் ஏமாற்றம் அடையும் போது, புதிய துணையை தேடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் திருமணமான பிறகும், அவர்களது உறவில் இருக்கும் நிச்சயமற்ற தன்மை, சந்தேகத்தையோ, மனக்கசப்பையோ ஏற்படுத்தும் போது இவர்கள் விவாகரத்து முடிவை எடுக்கின்றனர்.