ஆப்பிள் நிறுவனத்தால் தான் விவாகரத்து - 53 கோடி நஷ்டஈடு கேட்கும் தொழிலதிபர் சொன்ன காரணம்
தம் மனைவி விவாகரத்து கேட்பதற்கு காரணம் ஆப்பிள் நிறுவனம்தான் என இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.
இங்கிலாந்து
இங்கிலாந்தை சார்ந்த தொழிலதிபர் ஒருவர் தன் மனைவிக்கு தெரியாமல் ஐபோன் மூலம் பாலியல் தொழிலாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி சந்தித்து வந்தார். இதன் பின் அவர் அந்த குறுஞ்செய்திகளை நீக்கி விடுவார். இந்நிலையில் அவர் ஐபோன் இணைக்கப்பட்ட ஐமேக் கணினியில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்கள் இருந்துள்ளன.
குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் அந்த மேக் செயலியில் தன் கணவர் பாலியல் தொழிலாளிக்கு கடைசியாக குறுஞ்செய்தி அனுப்பியதை அவரது மனைவி பார்த்துள்ளார். மேலும் அவர் ஆராய்ந்து பார்த்ததில் கணவர் பல ஆண்டுகளாக இது போல் அனுப்பி விட்டு அழித்தது தெரிய வந்துள்ளது.
விவாகரத்து
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி விவாகரத்து கோரியுள்ளார். மேலும் ஜீவனாம்சமாக 53 கோடி கேட்டுள்ளார். இந்த நிலையில் அந்த தொழிலதிபர் ஆப்பிள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். செய்தியை நீக்கிய போது நீக்கப்பட்டதாகவே தகவல் வந்தது. ஆனால் ஐபோன் இணைக்கப்பட்ட மற்ற செயலிகளில் நீக்கப்படவில்லை.
ஆப்பிள் நிறுவனம் இதை பயனர்களுக்கு தெளிவு படுத்தி இருக்க வேண்டும். இதனால் தான் என் மனைவியுடன் விவாகரத்து வரை சென்றுள்ளது. விவாகரத்து வலி நிறைந்த ஒன்று. ஆப்பிள் நிறுவனம் நஷ்ட ஈடாக 53 கோடி வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.