எங்கள் நிறுவனத்தில் ஐபோன் தடை - காரணம் சொன்ன எலான் மஸ்க்

iMac iPhone Apple Elon Musk
By Karthikraja Jun 11, 2024 07:01 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

ஆப்பிள் நிறுவனம், Open AI நிறுவனத்துடன் இணைவது  தொடர்பாக எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐபோன் தடை

ஆப்பிள் நிறுவன சாதனங்களான ஐபோன், மேக் போன்றவற்றின் இயங்குதளத்தில் ‘ஓபன் ஏஐ’ டூல்கள் பயன்பாட்டுக்கு வந்தால், அந்த சாதனங்களை எனது நிறுவனங்களில் பயன்படுத்த தடை விதிப்பேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.  

Tim Cook

இதன் மூலம் ஆப்பிள் சாதன பயனர்களின் தரவு சார்ந்த விவரங்களை ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்கிறது என்றும் விமர்சித்துள்ளார். ஓபன் ஏஐ, அதன் ‘சாட் ஜிபிடி’ ஜெனரேட்டிவ் ஏஐ மாடலை டிரெயின் செய்ய பிரைவேட் டேட்டாவை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எலான் மஸ்க் - அந்த விஷயத்தையும் உறுதி செய்துள்ளார்

மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எலான் மஸ்க் - அந்த விஷயத்தையும் உறுதி செய்துள்ளார்

எலான் மஸ்க்

அதோடு இது ஆப்பிள் பயனர் பிரைவசியில் பின்னடைவாக அமையும் என்றும், ஆப்பிள் நிறுவனத்தால் சுயமாக ஏஐ பணியில் ஈடுபட முடியாதது குறித்தும் பேசியுள்ளார்.

இது ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறல். என் நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும். அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.