90கிட்ஸ் கல்யாணம் தள்ளி போவதற்கு என்ன காரணம்? - ஜோதிடர் Dr. கா.பார்த்திபன் பேட்டி...!

IBC Tamil Astrology
By Nandhini Mar 05, 2023 11:16 AM GMT
Report

90கிட்ஸ் கல்யாணம் தள்ளி போவதற்கு என்ன காரணம்? என்பதை குறித்து ஜோதிடர் கா.பார்த்திபன் நேர்காணல் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

ராஜ நாடி -

ஜோசியம் என்பது சமஸ்கிருதை வார்த்தை. ஜோதி என்பது நாம் அனைவரும் லைட் (Light) என்று சொல்கிறோம். லைட் (Light) மின்காந்த அலைவரிசையில் நம் கண்களுக்கு தெரிந்து எரிவது. உலகத்தில் அனைத்து அலைகளும் சேர்ந்ததுதான் ஜோதி. இது சமஸ்கிருதம். இதற்கு தமிழில் நாடி என்று சொல்வார்கள். ஜோசியம் என்று சொன்னால் அது சமஸ்கிருத வார்த்தை. என்னுடைய தாத்தா அதை சொல்லி கொடுத்ததால், அதை ராஜநாடி என்று செல்கிறேன். ரேகைகளையும், ஓலைகளையும் வைத்து பார்ப்பது ஜீவநாடி. ஜோசியம் கிரகங்களின் நிலைகளை வைத்து பார்க்கப்பதாகும்.

90 கிட்ஸ் கல்யாணம் தள்ளி போவதற்கு என்ன காரணம்?

வருத்திற்கும், திருமணத்திற்கும் ஏதாவது சம்பந்தம் கண்டிப்பாக உள்ளது. இதில் 2 விஷயங்களை கவனிக்க வேண்டும். பொதுவாக காலங்கள் மாறிக்கொண்டே செல்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு ஐடி என்ற துறை கிடையாது. தற்போது ஜோசியத்திற்குள் ஐடி என்ற துறையை கொண்டு வர வேண்டி உள்ளது. இதுபோல் காலங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே செல்கிறது. அந்த காலத்தில் 11 வயதில் திருமணம் நடந்தது. அந்த குணம் 80ல் மாறியது. அந்த காலத்தில் ஆண்களுக்கு திருமண வயது 21, 22தான். தற்போது 27 வயதில் திருமணம் நடைபெறுகிறது.

கால மாற்றங்களுக்கும், அதற்கு கிரக அமைப்புகளும் மாறுகிறது. கிரக அமைப்புகளில் பொதுவாக திருமணத்தை குறிப்பது சுக்ரன். இந்த சுக்ரன் 90 கிட்ஸ் குறிப்பிட்ட இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். மேஷம், ரிஷபம், துலாம், விருச்சகம், மீனம் மற்றும் கன்னி இந்த 6 இடத்தில் சுக்ரன் உட்கார்ந்து கொண்டிருப்பதால் இதுபோல் திருமண தாமதங்கள், திருமண தடைகள் வருகிறது.

இதற்கு பரிகாசம், ராகு,கேது தோஷம் இதுபோல் பல தோஷங்கள் சொல்லப்படுகிறது. அது எதற்காக சொல்லப்படுகிறது என்றால், அது இருக்கிறதா என்றால், ராகு,கேது தோஷம் இருப்பவர்களுக்கு 20 வயதில் கல்யாணம் நடப்பதையும் பார்க்கிறோம். அதே ராகு, கேது தோஷம் இருப்பவர்களுக்கு 40 வயதிலும் திருமணம் நடைபெறுவதை பார்க்கிறோம். இதற்கு ராகு, கேது தோஷம் மட்டுமே காரணம் இல்லை. வேறு காரணங்களும் உள்ளது. இதற்கு கிரகங்கள் அமைந்த முறைதான்.

திருமணம் தாமதம் என்பது வழி, வழியாக, மரபு ரீதியாக வருகிறது. தற்போது 90 கிட்ஸில் நிறைய பேருக்கு கல்யாணம் நடந்திருக்கிறது. அவர்களுடைய தந்தையின் வயதை பார்த்தால், 20, 21 வயதில் திருமணம் செய்திருப்பார். கல்யாணம் ஆகாதவர்களைப் பார்த்தால், அவர்களுடைய அப்பா, அம்மா 28, 29 வயதில்தான் திருமணம் செய்திருப்பார்கள். இதுபோல் எல்லா ஒரே இடத்தில் வந்து நிற்பதால் 90 கிட்ஸ் தலையில்தான் விழுந்திருக்கிறது.

யாரும் இது குறித்து கவலைப்பட வேண்டாம். 90 கிட்ஸ்க்கு 29 வயதுக்கு மேல் திருமணம் நடப்பது மிக, மிக நன்மை. ஒருவேளை 90 கிட்ஸ்க்கு ஜாதக ரீதியாக பிரச்சினை இருந்து 20, 25 வயதில் திருமணம் நடந்தால் அது பிரேக் அப் ஆகிறது.

90 கிட்ஸ்களுக்கு 28, 29 வயதில் திருமணம் நடந்தால் அது இயற்கையாகவே நல்ல வாழ்க்கையை கொடுக்கிறது. 29, 30 வயது தாண்டிவிட்டால் ஜாதகத்தில் உள்ள எந்தவிதமான பிரச்சினைகளும் சரியாகிவிடுகிறது என்பதை ஜோதிட விதிகள் சொல்கிறது.

astrology-josiyam-for-marriage-ibc-bhakthi

குருபெயர்ச்சி

அடுத்த மாதம் வரக்கூடிய குருபெயர்ச்சியில் சனி பகவான் தன்னுடைய வீடான கும்பத்திற்கே ஏறியிருக்கிறார். ராகு, கேது இந்த வருட இறுதியில் மாறப்போகிறது. இது இந்த வருடம் எல்லாமே உலகத்தில் உள்ள ஜாதகத்திற்கு திருமண பந்தங்களை ஏற்படுத்தி கொடுக்கப்போகிறது. குழந்தை சமந்தப்பட்ட பந்தங்களையும் ஏற்படுத்தி கொடுக்கப் போகிறது. 90 கிட்ஸ் அனைவருக்கும் இந்த வருடம் திருமண விழாவாகத்தான் இருக்கும்.

80- 83ம் ஆண்டு மற்றும் 90-91ம் ஆண்டில் பிறந்தவர்களுக்கு என்ன நடக்கிறது?

குரு மற்றும் கேது, இந்த 2 கிரகங்கள் திரிகோணத்தில் அமைகிறது. திரிகோணம் என்றால் ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கிறது. ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்குரிய தூரங்களை யோகம் என்று சொல்கிறார்கள். குருவிற்கு கேது இணை வரும்போது ஒரு எல்லையற்ற, சமூகத்தை தாண்டிய உறவு தேவைப்படுகிறது. அதுதான் லிவிங்-டூ-கெதர்.

லிவிங்-டூ-கெதர் உறவு

சமூகத்தை உடைத்துக்கொண்டு திருமண வாழ்க்கை வாழ்வது, இது மாதிரியான அமைப்புகள் குறிப்பிட்ட வருடங்களில் பார்க்கிறோம். அவர்களுக்கு திருமணம் ஆகாதது நல்லது. இவர்களுக்கு திருமணம் ஆகியிருந்தால், திருமணத்திற்கு பிறகு சில நபரிடம் அவர்களுக்கு தொடர்பு ஏற்படும். பூர்வீகமாக சில குடும்பங்கள் நல்ல குடும்பமாக வந்திருக்கும். அந்த குடும்பங்களில் இந்த மாதிரியான அமைப்பு பிறந்தால், தாமதமாக திருமணம் செய்து அதை சரிசெய்து விடலாம். ஏற்கெனவே, அவர்களுடைய அப்பா, அம்மாவிற்கு திருமணம் நடந்திருந்தால், ஏற்கெனவே இயற்கையாக குறைகள் இருக்கிறது. அதற்கு தாமதமாக திருமணம் செய்தால் அதை சரி செய்து விடலாம்.

பரிகாரம்

ஜோசியத்தில் பரிகார நூல்களில் பரிகாரம் என்பது குறிக்கப்படவில்லை. மக்களுக்கு வாழ்க்கை மேல் இருக்கக்கூடிய பயம். ஜோஷியர்கள் அவர்களுடைய வாழ்க்கைப் பற்றி சொல்லும்போது அது உண்மைகளைதான் சொல்கிறார்களா என்ற வாழ்க்கை தேற்றிவிட்டுவிடுவார்களா என்று நினைப்பார்கள். எதார்த்தமாக பார்த்தால் இது நடப்பதில்லை. ஜாதகத்தில் சில அமைப்புகள் இருக்கும். உங்களுக்கென்ற பெண் நீங்கள் பிறக்கும்போது எழுதி வைத்ததுதான்.

பரிகாரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் உங்களுக்காக வந்து சேரும். உங்கள் ஜாதகத்திற்கு பெண் வரும்வரை காத்துக்கொண்டிருங்கள். அவசரப்பட்டால் வாழ்க்கையை ஈஸியாக வாழ்ந்துவிட முடியாது. அப்படி இயற்கையோடு ஒன்றிப்போற வாழ்க்கை நன்றாக இருக்கும்.

உங்கள் ஜாதகத்தில் எப்போது நடக்கும் என்பதை ஜாதகத்தில் காத்துக்கொண்டிருக்கலாம். அதற்கு பதிலாக பரிகாரம் என்று போய் நேரத்தை செலவழிக்க வேண்டியது கிடையாது. மனதையும் கெடுத்துக்க வேண்டாம். காத்துக்கொண்டிருங்கள்.

விவாகரத்து ஆவது ஏன்?

ஜாதகம் இல்லாத காலத்தில் மக்களின் உடைய பயத்தை போக்குவதற்காக ஏதோ ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்ததுதான் இந்த நட்சத்திரப் பொருத்தம். இது பொதுவாக எதார்த்தத்தில் ஒத்துவருவது இல்லை. சுவாதி நட்சத்திரத்தில் தரமான நபர்களும் இருக்கிறார்கள். தரம் குறைந்த நபர்களும் இருக்கிறார்கள்.

நட்சத்திரம் என்பது ஒரு மனிதருடைய எந்த போக்குகளை குறிப்பிடுமே தவிர வாழ்க்கையை குறிப்பிடாது. திருமண பொருத்தம் பார்ப்பவர்கள் நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பதைவிட வர ஜாதகங்களுடைய வாழ்க்கை ஒரு 25 வருடத்திற்கு எப்படி போகப்போகிறது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் திருமணம் செய்யலாம். நட்சத்திரம் பொருத்தம் பெற்ற சிலர் சரியாக வாழ்வது இல்லை.

காதல் திருமணத்தில் ஏன் மகிழ்ச்சி ஏற்படுகிறது...?

ஜாதகமே பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். ஜோதிடத்தில் ஒரு சிஸ்டம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அது நமக்கு தெரியாது.

குரு, கேது, சுக்கிரனிடம் போட்டி இருந்தால் அவர்கள் விருப்பப்பட்ட திருமணத்திற்கு செல்கிறார்கள் ஒருவேளை குரு, கேது இருக்கிறவர்கள் விருப்பப்படாத திருமணத்தை செய்தார்கள் என்றால் அவர்கள் சரியாக வாழ்வது இல்லை. எல்லாமே பிரேக் அப் ஆகி 2-வது திருமணத்திற்கு வந்து நிற்கிறது.

குரு, கேது இருக்கிறர்கள் 99 சதவீதம் அவர்கள் விருப்பப்பட்ட திருமணத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி செய்கிறவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒன்று உறவுக்குள் திருமணம் செய்தால் நன்றாக இருப்பார்கள். அல்லது காதல் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருப்பார்கள்.