உலுக்கும் கொரோனா; அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் - பொது சுகாதாரத் துறை

COVID-19 Tamil nadu Government Of India Virus
By Sumathi Dec 30, 2023 07:12 AM GMT
Report

அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

கோவா, மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஜேஎன்1 வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

covid19 in india

அதனைத் தொடர்ந்து, மாநில அரசுகளுக்கு பல்வேறுஅறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத் துறை வழங்கி வருகிறது. தினமும் 350-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எச்சரிக்கை: மீண்டும் தாண்டவமாடும் கொரோனா - தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!

எச்சரிக்கை: மீண்டும் தாண்டவமாடும் கொரோனா - தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!

ஆர்டிபிசிஆர் கட்டாயம்

இந்நிலையில், தமிழகத்தில் யாருக்கு எல்லாம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தலை சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு செல்வவிநாயகம் வழங்கியுள்ளார். அதில், “காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

rtpcr-test

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு கரோனாபரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். தொற்றுஉறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தீவிர நுரையீரல் தொற்றுக்குள்ளானவர்கள், இன்ஃப்ளூயன்சா போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.