இந்தியாவிலும் தலைவிரித்தாடும் கொரோனா; இவ்வளவு பாதிப்பா? கவனம் மக்களே!

COVID-19 India Death
By Sumathi Dec 26, 2023 05:29 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஜே.என்.1

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும், கேரளாவில் முதல்முறையாக ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

jn1-cases

அதனைத் தொடர்ந்து, கோவாவில் 34 பேரிடம் புதியவகை கொரோனா கண்டறியப்பட்டது. மராட்டியத்தில், 9 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும், கேரளாவில் 6 பேருக்கும், தமிழ்நாட்டில் 4 பேருக்கும்,

நிலைமை படுமோசம்; 2 மடங்காக எகிறும் கொரோனா - எய்ம்ஸ் நிபுணர் எச்சரிக்கை!

நிலைமை படுமோசம்; 2 மடங்காக எகிறும் கொரோனா - எய்ம்ஸ் நிபுணர் எச்சரிக்கை!

பாதிப்பு எண்ணிக்கை

தெலுங்கானாவில் 2 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய வகை கொரோனா லேசான பாதிப்பை தான் ஏற்படுத்துவதாகவும், 92 சதவீத நோயாளிகள் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

covid 19 india

இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் மொத்தம் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இந்த 3 பேரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதில் பெங்களூரில் மட்டும் 20 பேருக்கு JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.

மொத்தம் 34 பேருக்கு JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு (WHO) தென்கிழக்கு ஆசிய நாடுகளை கண்காணிப்பை அதிகரிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.