தவழ்ந்து சென்று முதல்வரானவர் - உதயநிதியை பற்றி பேச அருகதை இல்லை - திமுக சாடல்..!!

Udhayanidhi Stalin M K Stalin Edappadi K. Palaniswami
By Karthick Dec 27, 2023 04:35 AM GMT
Report

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்ததற்கு எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி.

ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

இது குறித்து திமுகவின் அமைப்பு செயலாளர்ரான ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜகவுடன் கூட்டணி இல்லை எனத் தெளிவுபடுத்திவிட்டோம்" என பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி இல்லை என முடிவாகிவிட்டால் பாஜகவை விமர்சிக்க வேண்டியதுதானே! அதிமுகவை யார் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

தவழ்ந்து சென்று முதல்வரானவர் - உதயநிதியை பற்றி பேச அருகதை இல்லை - திமுக சாடல்..!! | Rs Bharathi Slams Eps For Condemning Stalin Udhay

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றிய அரசைக் கண்டித்தோ அல்லது பாஜக-வைக் கண்டித்தோ ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்றவில்லையே ஏன்? தமிழ்நாடு அரசு தொடர்பான தீர்மானங்களில் ’கண்டனம்’; ஒன்றிய அரசு தொடர்பான தீர்மானங்களில் எல்லாம் ’வலியுறுத்தல்’ என்பது இரட்டை முகமூடிதானே! பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற பழனிசாமியின் பச்சைப் பொய் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

சென்னையிலும் தென் மாவட்டங்களிலும் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புகளின் காரணமாகக் கழக இளைஞரணி மாநாடு தள்ளி வைக்கப்பட்டதை ஏளனம் செய்து மட்டமாகக் கருத்து தெரிவித்துப் பேசியிருக்கிறார் பழனிசாமி. புயல் - மழை - வெள்ளத்தால் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்போது மாநாடு நடத்த வேண்டாம் என்று எங்கள் தி.மு.கழகத் தலைமை முடிவெடுத்ததைப் பழனிசாமி பாராட்டி இருக்க வேண்டும்.

தவழ்ந்து சென்று முதல்வரானவர் - உதயநிதியை பற்றி பேச அருகதை இல்லை - திமுக சாடல்..!! | Rs Bharathi Slams Eps For Condemning Stalin Udhay

ஏதோ தான் சாபம் விட்டதைப் போல சவடால் விட்டுள்ளார் பழனிசாமி. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டையே டிவியைப் பார்த்துத் தெரிந்து கொண்டவர் பழனிசாமி. அதனால் அவர் டிவி பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். இளைஞர் அணி மாநாடு 2 முறைதான் தள்ளி வைக்கப்பட்டது. அதுவும் மக்களுக்காக! சென்னை வெள்ளம் ஏற்பட்ட போதும் தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு உண்டானபோது ஆட்சியில் இருக்கும் திமுக முதலில் மக்களுக்குத்தான் சேவை செய்யும். கட்சி மாநாடு இரண்டாம்பட்சம்தான்.

நா அதெல்லாம் அவிழ்த்துவிட்டால் - நீ திகாருக்கு தான் போகணும் - ஓபிஎஸ் எச்சரிக்கை..!!

நா அதெல்லாம் அவிழ்த்துவிட்டால் - நீ திகாருக்கு தான் போகணும் - ஓபிஎஸ் எச்சரிக்கை..!!

மதுரை அதிமுக மாநாட்டில் தொண்டர்களுக்கு மோசமான வகையில் உணவு வழங்கப்பட்டதால் அண்டா அண்டாவாக உணவைத் தரையில் கொட்டி விரயமாக்கியது எல்லாம் மறந்துவிட்டதா? தவழ்ந்து சென்று முதல்வரான எடப்பாடிதான் அரசியலில் கத்துக்குட்டி. கஜா புயல் டெல்டாவைத் தாக்கியபோது சேமூர் அம்மாபாளையத்தில் மாமனார் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்த பழனிசாமி எல்லாம் வெள்ள பாதிப்புக் களத்தில் மக்களோடு நிற்கும் அமைச்சர் உதயநிதியைப் பற்றிப் பேசவே அருகதை அற்றவர்.

’எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில், சிறப்பான முறையில் கொண்டாடப்படும் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இவர்கள் முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்த தீர்மானப் புத்தகத்தில் இது இல்லை. ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவை மறந்துவிட்டதால் அதனைத் தீர்மானப் புத்தகத்தில் சேர்க்கவில்லை. கடைசி நேரத்தில் யாரோ நினைவுபடுத்த வேறு வழியில்லாமல் சிறப்புத் தீர்மானம் என்ற பெயரில் தனியாகக் கொண்டு வந்து தொண்டர்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.

யார் பொம்மை..?

2022 நவம்பர் 30-ஆம் தேதிதான் ஜானகி அம்மாளின் 100-ஆவது பிறந்தநாள். அந்த நூற்றாண்டைக் கூட கொண்டாட முடியாமல் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் பிரிந்து சண்டை போட்டு கொண்டிருந்தார்கள். அதிமுகவில் உட்கட்சிக் குழப்பம் நடந்து வந்தபோது ஜானகி அம்மாளை மறந்துவிட்டு திடீரென தேர்தல் நேரத்தில் ஜானகி அம்மாளின் நூற்றாண்டைக் கொண்டாட நினைக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜானகி அம்மாள் 100-ஆவது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்.

தவழ்ந்து சென்று முதல்வரானவர் - உதயநிதியை பற்றி பேச அருகதை இல்லை - திமுக சாடல்..!! | Rs Bharathi Slams Eps For Condemning Stalin Udhay

டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில் நடந்த ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார். ஜானகி அம்மாள் நூற்றாண்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார். ஜானகி அம்மாளை வாழ்த்தியும் பேசினார். ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவே முடிந்த பிறகு திடீரென எந்த போதி மரத்திலோ ஞானோதயம் பெற்று அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம் எனப் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

காவிரி நதிநீர் பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுந்தபோது, தொடர்ந்து 22 நாட்கள் நாடாளுமன்றத்தைத் தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக உறுப்பினர்கள் முடக்கினார்கள்’’ என சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. பழனிசாமி சொல்லும் அந்த நிகழ்வு நடந்தது 2018 மார்ச் மாதம் நடந்தது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்துத் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அப்போது கொண்டு வந்தனர். அதனை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்காக அதிமுக எம்.பிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல நாட்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்.

ஸ்டாலின் தான் வந்தாரு நீச்சல் அடிக்க விட்டாரு - பாட்டில் விமர்சித்த இபிஎஸ்

ஸ்டாலின் தான் வந்தாரு நீச்சல் அடிக்க விட்டாரு - பாட்டில் விமர்சித்த இபிஎஸ்

‘’அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் மேட்ச் பிக்ஸிங் உள்ளது’’ என்று அன்றைக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டினார். அந்த நேரத்தில்தான் ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம்'' எனச் சொன்ன கே.சி.பழனிசாமியை மின்னல் வேகத்தில் கட்சியைவிட்டு நீக்கி மோடி விசுவாசத்தை காட்டினார் பழனிசாமி. எனவே காவிரிக்காக நாடாளுமன்றத்தை முடக்கினோம் என அவர் சொன்னதும் பச்சைப் பொய்யே ஆகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான பல குற்றச்சாட்டுகளைப் பழனிசாமி வைத்துள்ளார்.

தவழ்ந்து சென்று முதல்வரானவர் - உதயநிதியை பற்றி பேச அருகதை இல்லை - திமுக சாடல்..!! | Rs Bharathi Slams Eps For Condemning Stalin Udhay

பொம்மை முதலமைச்சராக இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார். சசிகலாவின் பொம்மையாக எடப்பாடி முதலில் இருந்தார். டிடிவி தினகரனின் பொம்மையாக மாறினார். பின்னர் மோடியின் பொம்மையாக மாறினார். கமலாலயத்தில் ஒரு அறையில் அதிமுக அலுவலகத்தை நடத்தி கொள்ளும் வகையில் பாஜகவுக்கு அடிமையாக சேவகம் செய்த பழனிசாமி எல்லாம் பேசுவதற்குக் கொஞ்சமும் தகுதி இல்லாதவர். இப்போதும், அமித் ஷா ஆட்டுவிக்கும் ஆட்டத்துக்கு ஆடும் பொம்மையாகச் செயல்பட்டு வருபவர்தான் பழனிசாமி என்பதை அவரது கட்சிக்காரர்களே அறிவார்கள்.

அதிமுக ஆட்சி எப்போது வரும் என்ற மன நிலையில் மக்கள் இருப்பதாக பழனிசாமி பேசி இருக்கிறார். 2019 நாடாளுமன்ற தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022-ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என 8 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது.

எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க வந்த பிறகு தொடர்ச்சியாகத் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது அ.தி.மு.க. தோல்வியைத் தோளில் போட்டு வளர்த்து வருகிறவர் பழனிசாமி. அவரால் அதிமுகவை அரை அங்குலம் கூட வளர்க்க முடியாது என்பது அக்கட்சியினருக்கே தெரியும். வரப் போகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தோல்வியைத் தழுவி ‘தோல்விசாமி’ என்பதை அவர் மெய்ப்பிக்கத்தான் போகிறார். இதனை நாடு பார்க்கத்தான் போகிறது.