நா அதெல்லாம் அவிழ்த்துவிட்டால் - நீ திகாருக்கு தான் போகணும் - ஓபிஎஸ் எச்சரிக்கை..!!

O Paneer Selvam ADMK Edappadi K. Palaniswami
By Karthick Dec 27, 2023 12:52 AM GMT
Report

நேற்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆலோசனை கூட்டமும் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலோசனை கூட்டம்

அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், கோவை மாவட்ட சூலூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (26-12-23) ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் நிர்வாகிகளிடத்தில் பேசிய அவர், 2019 பொதுத்தேர்தலில் தேனி தொகுதிக்கு மட்டுமே பிரதமர் மோடி வந்தார் என குறிப்பிட்டு, வெற்றி பெற்ற ரவியை மத்திய அமைச்சராக நினைத்த போது, ஈபிஎஸ் டெல்லிக்கு சென்று அதை தடுத்து நிறுத்தினார் என்று தெரிவித்தார்.

ops-slams-eps-in-ruling-time-frauds

அதிமுக பொதுச் செயலாளார் பட்டமும், இரட்டை இலை சின்னமும் நன்றி மறந்த நபரிடம் தற்காலிகமாகத்தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று சுட்டிக்காட்டி பேசிய ஓபிஎஸ், உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்பதை குறிப்பிட்டு, தொண்டர்களும், மக்களும் நம்பக்கம்தான் உள்ளார்கள் என நிர்வாகிகளிடத்தில் உறுதிபட தெரிவித்தார்.

எம்ஜிஆர், அம்மாவின் ஆன்மாவிடம் மீண்டும் அதிமுகவை கைப்பற்றி ஒப்படைப்பதே தனது நன்றிக்கடனாக இருக்கும் என அதிரடியாக தெரிவித்த அவர், அதிமுக எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்குத்தான் பன்னீர் செல்வம் அரசியல் கடமை ஆற்றுவானே ஒழிய, தனிக்கட்சி தொடங்க என்னாளும் முன் வர மாட்டேன் என உறுதியுடன் தெரிவித்தார்.

நா அவிழ்த்துவிட்டால்...

தொடர்ந்து பேசிய அவர், நாம் தேர்தலில் நிற்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் இந்த தேர்தலுக்கு அமைப்பு ரீதியான நிலையை நாம் எடுத்து இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தடவைதான் முதலமைச்சர் பதவி கொடுத்தார்கள் என்னென்ன பாடுப்படுத்தினார் என்ற ஓபிஎஸ், இரண்டு முறை அம்மா தனக்கு முதல்வர் தரும்போது அப்படியே கொடுத்துவிட்டேன் என்று நினைவுபடுத்தினார்.

ops-slams-eps-in-ruling-time-frauds

தன்னை யாரும் நம்பிக்கை துரோகி என சொல்ல முடியாது என்று அதிரடியாக தெரிவித்த அவர், நீ முதலமைச்சரா என்னென்ன செஞ்ச என்பது எனக்கு நல்லா தெரியும், நான் கையெழுத்து போட்டுத்தான் பைல் பூரா அடுத்தது போகும், நான் அவிழ்த்துவிட்டால் நீ திகார் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும் என எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்தார்.