விரல் ரேகை: நிவாரணத் தொகை பெறுவதில் புதிய சிக்கல் - அரசு நடவடிக்கை!
விரல் ரேகை சரியாக பதிவாகாத நிலையில் பலருக்கும் நிவாரணத்தொகை வழங்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளப் பாதிப்பு
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு ரூ. 6000 நிவாரணம் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 6000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய சிக்கல்
அதன்படி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைரேகை பதிவின் மூலமாக நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விரல் ரேகை சரியாக பதிவாகாத காரணத்தினால் பெரும்பாலான வயது முதிர்ந்தோருக்கு நிவாரணத்தொகை வழங்குவது மறுக்கப்படுகிறது.
இதனால், நிவாரணத் தொகை தொகை பெறுவதற்கான டோக்கன் கிடைத்தும் நிவாரணத்தொகை பெற முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே இதனை தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், பொதுமக்களிடம் கைரேகை பெற்று, 6,000 ரூபாய் வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்த பின், உங்களது பெயர் புத்தகத்தில் இல்லை' எனக் கூறி, ரேஷன் கடை ஊழியர்கள் பணம் தராமல் மோசடி செய்வதாக மக்கள் புலம்புவது குறிப்பிடத்தக்கது