சென்னை புயல் நிவாரணம் ரூ.6,000: டோக்கன் எப்போது..? - அமைச்சர் உதயநிதி புதிய தகவல் !
மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படும் தேதியை அறிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
நிவாரண தொகை
சென்னையில் மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கப்பட்டு என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த தொகை நியாயவிலைக் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சிந்தாதிரிப்பேட்டையில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உதவிகளை அளித்தார்.
டோக்கன் எப்போது?
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ. 5,060 கோடி கேட்ட நிலையில் ரூ. 450 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. இது போதுமானதாக இல்லை.
தமிழக அரசு சார்பில் புயல் பாதித்த பகுதியில் நிவாரணத் தொகை வழங்க டிசம்பர் 16ம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும். தொடர்ந்து 10 நாட்களில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.