நிவாரணம் ரூ.6000; கிடைக்கவில்லையென்றால் என்ன செய்யனும்? முக்கிய தகவல்!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நிவாரணத் தொகை
சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படவுள்ளது. அதற்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
டோக்கன் பணி
ரேஷன் கடை அடிப்படையில் டோக்கன் வழங்கப்படும். அதன்பின் 10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும். இந்நிலையில், டோக்கன் கிடைக்காதவர்கள், ரேஷன் கடைகளில் பணம் கிடைக்காதவர்கள் கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் அப்ளிகேஷன் ஒன்று இருக்கும்.
இந்த அப்ளிகேஷனை நிவர்த்தி செய்து கொடுத்தால், அதை பரிசீலனை செய்து உங்களுக்கும் பணம் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.