வரி ஏய்ப்பு செய்த விவோ நிறுவனத்திடம் இருந்து ரூ.465.73 கோடி பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி..!

Government Of India Government of China
By Thahir Jul 07, 2022 07:01 PM GMT
Report

வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் விவோ நிறுவனத்திடம் இருந்து ரூ.465.73 கோடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

வரி ஏய்ப்பு செய்த விவோ நிறுவனம்

விவோ செல்போன் நிறுவனம் அதன் சார்பு நிறுவனங்களுக்கு சொந்தமான 48 இடங்களில் அமலாக்கத்துறை தொடர் சோதனை நடத்தியது.

வரி ஏய்ப்பு செய்த விவோ நிறுவனத்திடம் இருந்து ரூ.465.73 கோடி பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி..! | Rs 465 73 Crore Seized From Vivo

அதில், விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலமானது. இந்தியாவில் சம்பாதித்த பணத்தை வரி செலுத்தாமல் சீனாவுக்கு அனுப்பியதும் இதில் தெரிய வந்தது.

இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடி சம்பாதித்த விவோ, அதில் 50 சதவீதம் வரி செலுத்தாமல் சீனாவுக்கு அனுப்பியுள்ளது.

ரூ.465.73 கோடி பறிமுதல்

இதனையடுத்து விவோ இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரூ.465.73 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

119 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.465 கோடி பணமும், 66 கோடி நிரந்தர வைப்புத்தொகையும், ரொக்கமாக ரூ.73 லட்சமும், 2 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை விளக்கமளித்துள்ளது.

அதிகரித்த பாலியல் குற்றச்சாட்டு , கவிழ்ந்த போரிஸ் ஜான்சன் அரசு : ஆட்சி கவிழ காரணம் என்ன?