நேஷனல் ஹெரால்டு வழக்கு - 4-வது நாளாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை இன்று 4-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை வளையத்தில் ராகுல் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி நிர்வாக இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டு வருகிறது.
ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையின் முன்னதாக 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். விசாரணையில் ராகுல்காந்தியிடம் மொத்தம் 28 மணி நேரத்திற்கு மேல் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளனர்.
சோனியா காந்திக்கு சுவாச பாதையில் பூஞ்சை தொற்று பாதிப்பு
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சோனியா காந்தியின் சுவாச பாதையில் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளுக்கான சிகிச்சையுடன் சேர்த்து பூஞ்சை பாதிப்புக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சுவாச பாதையில் ஏற்பட்ட பூஞ்சை பாதிப்பிலிருந்து சோனியா காந்தி மீண்டு வருகிறார்
நேஷனல் ஹெரால்டு வழக்கு
இதற்கிடையில், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் 3 நாளாக 30 மணி நேரம் விசாரணை செய்தது. சோனியா காந்தியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜூன் 23-ம் தேதி ஆஜராக அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
4-வது நாளாக விசாரணை
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று அமலாக்கத்துறையில் ஆஜராகியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.