சென்னையில் 14 ஏக்கரில் ஒரு அரண்மனை; வசித்து வரும் மன்னர் குடும்பம் - எங்கு தெரியுமா?

Tamil nadu Chennai India
By Jiyath May 28, 2024 06:06 AM GMT
Report

 சென்னையில் அமைந்துள்ள பெரிய அரண்மனை பற்றிய தகவல்.

அமீர் மஹால்

சென்னை, ராயப்பேட்டையில் 14 ஏக்கரில் "அமீர் மஹால்" என்ற ஒரு பெரிய அரண்மனை உள்ளது. ஆற்காடு நவாப் ஆட்சி செய்த பகுதியில் சென்னையில் சில பாகங்களும் அடங்கும். 1768ம் ஆண்டு முதல் 1855ம் ஆண்டுவரை ஆற்காடு நவாப் இந்த அரண்மனையில்தான் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். 

சென்னையில் 14 ஏக்கரில் ஒரு அரண்மனை; வசித்து வரும் மன்னர் குடும்பம் - எங்கு தெரியுமா? | Royapettah Palaces In Chennai Royal Family Lives

இந்த அரண்மனை 1798ம் ஆண்டு இந்தோ சர்செனிக் முறையில் கட்டப்பட்டது. பின்னர் 1855ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் வாரிசு இழப்புக் கொள்கையின்படி, ஆற்காடு நவாபின் ஆட்சியை கைப்பற்றினர்.

இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பள்ளி; அதுவும் சென்னையில் - எத்தனை நூற்றாண்டு தெரியுமா?

இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பள்ளி; அதுவும் சென்னையில் - எத்தனை நூற்றாண்டு தெரியுமா?

மன்னர் குடும்பம்

இதனையடுத்து திருவல்லிக்கேணியில் உள்ள ஷாதி மஹால் என்ற சிறிய இடத்தில்தான் ஆற்காடு நவாபின் குடும்பம் வாழ்ந்து வந்தனர். ஆனால் ஆங்கிலேயருடன் நல்ல உடன்படிக்கையில் இருந்த ஆற்காடு நவாபிற்கு அந்த இடம் சரியானது இல்லை என்று நினைத்த ஆங்கிலேயர்கள் அமீர் மஹாலை வழங்கினர்.

சென்னையில் 14 ஏக்கரில் ஒரு அரண்மனை; வசித்து வரும் மன்னர் குடும்பம் - எங்கு தெரியுமா? | Royapettah Palaces In Chennai Royal Family Lives

அதன் பிறகு, 1876ம் ஆண்டு அங்கு குடியேறிய ஆற்காடு நவாப் குடும்பம் தற்போதுவரை அந்த அரண்மனையில்தான் வசித்து வருகின்றனர். இங்கு தற்போதும் மன்னர் குடும்பத்தினரின் வம்சாவழியினர் வாழ்ந்து வருகின்றனர்.