சிறுமிக்கு ஆபாச வீடியோ; கதறிய ரவுடி பேபி சூர்யா, சிக்கா, சுமி - தீவிர விசாரணை!

Crime Puducherry
By Sumathi Oct 02, 2024 05:57 AM GMT
Report

 சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய வழக்கில் ரவுடி பேபி சூர்யாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆபாச வீடியோ

புதுச்சேரியை சேர்ந்த சிறுமி ஒருவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். இதனிடையே அந்த சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு அறிமுகம் இல்லாத புதிய நபரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

rowdy baby surya family

நாளைடைவில் இருவரும் குறுஞ்செய்தி அனுப்புவது, வீடியோக்களை பரிமாறுவது மூலம் நட்பாக பழகியுள்ளனர். இந்நிலையில், அந்த நபர் திடீரென சிறுமிக்கு பல்வேறு ஆபாச வீடியோக்கள் மற்றும் அந்த சிறுமியின் ஆபாச வீடியோவையும் அனுப்பி வைத்து மிரட்டத் தொடங்கியுள்ளார்.

‘ரவுடி பேபி’ சூர்யா மீது குவியும் புகார்கள் - குறிஞ்சியர் சமூகத்தை இழிவாக பேசியதாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!

‘ரவுடி பேபி’ சூர்யா மீது குவியும் புகார்கள் - குறிஞ்சியர் சமூகத்தை இழிவாக பேசியதாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!

சைபர் கிரைம் விசாரணை

உடனே சிறுமி இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீஸில் புகாரளித்ததன் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிறுமிக்கு ஆபாச வீடியோ; கதறிய ரவுடி பேபி சூர்யா, சிக்கா, சுமி - தீவிர விசாரணை! | Rowdy Baby Surya Pornographic Video Case

அதில், மதுரையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் சிக்கந்தின் ஷா-சுமி தம்பதியின் மகன் அஷ்ரப் அலி (24) என்பதும், ரவுடி பேபி சூர்யா அவரது சித்தி எனவும் தெரியவந்தது.

இதனையடுத்து மதுரை விரைந்த தனிப்படையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். புகார் கொடுத்ததால் சிறுமியின் குடும்பத்தை மிரட்டியதைத் தொடர்ந்து ரவுடிபேபி சூர்யா, அவரது சகோதரி சிமி- கணவர் சிக்கந்தின் ஷா ஆகியோரை சைபர் கிரைம் போலீஸார் அழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.