‘ரவுடி பேபி’ சூர்யா மீது குவியும் புகார்கள் - குறிஞ்சியர் சமூகத்தை இழிவாக பேசியதாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!
குறிஞ்சியர் சமூகம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த ரவுடி பேபி சூர்யா மீது தக்க நடவடிக்கை வேண்டும் என்று ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் குறிஞ்சி சந்திரசேகரன்.
இவர் இன்று ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு, நிர்வாகிகளுடன் வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், சமூக வலைத்தளங்களில் ரவுடி பேபி சூர்யா என்ற பெண், குறிஞ்சியர் இனத்தை குறித்து அவதூறாக பேசி வருகிறார்.
இதனால் தங்கள் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் மக்கள் மீது தவறான பார்வை விழுந்துள்ளது. இதனால், நாங்கள் மன உளைச்சலில் உள்ளோம்.
எனவே “சூர்யா ரவுடி பேபி 22” என்கிற யூடியூப் சேனலை தடை செய்வதுடன், ரவுடி பேபி சூர்யா என்ற பெண் மீது சட்ட ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.